கோவையில் கொடூரம்; நண்பனை சுத்தியால் அடித்து கொ** செய்து வீடியோ வெளீயிட்ட பகீர்…!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீடு புகுந்த மர்மக் கும்பல் 22 வயது வாலிபரை அரிவாளால் வெட்டியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

​பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், தனது வீட்டில் கழுத்தில் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்து உள்ளார்.

​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலையப் போலிசார், அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவருக்கும் அஸ்வினுக்கும் இடையே மது அருந்துவது தொடர்பான பழக்கத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்து உள்ளது. மேலும், இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஷை அஸ்வின் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

​இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த மாதேஷ் மற்றும் அந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, நேற்று நள்ளிரவு அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த சுத்தியல் மற்றும் அரிவாளால் அஸ்வினைச் சரமாரியாக வெட்டியும் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு அங்கு இருந்து தப்பியோடி உள்ளனர்.

​தற்போது தப்பியோடிய மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைப் பிடிக்கக் கிணத்துக்கடவு போலிசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடயே கொலை செய்த வீடியோவையும், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை வாயில் கடித்து போஸ் கொடுத்தவாறும் போட்டோ, வீடியோக்களை அந்த கொடூரர்கள் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகத் தெரிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நட்பாக பழகி கடத்தல்; ஐ.டி. ஊழியரை தாக்கி நகை, பணம் பறித்த நால்வர் கைது

செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபரை சந்திக்க சென்ற ஐ.டி. ஊழியரை காரில் கடத்தி தாக்கி, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் கோவையில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...