கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு 2026-27 மாணவர் சேர்க்கை தொடங்கியது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம் 2026-27 கல்வியாண்டிற்கான முதுநிலை Master’s) பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கல்வித் திறன், ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தரமான முதுநிலை கல்வியை வழங்கி வருகிறது.
முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம்சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம். வேளாண் வணிகம்சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட 34 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

2026-27 கல்வியாண்டிற்கான இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்: (https://admissionsatpgschool.tnau.ac.in/). வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல்பட்டுப்பூச்சி வளர்ப்பு. சமூக அறிவியல் மற்றும் தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகுதிகளான இளநிலைப் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது இளநிலைப் படிப்பின் இறுதியாண்டு / இறுதிப் பருவத்தில் பயிலும் மாணவர்கள் தாங்கள் முடித்துள்ள அனைத்து பருவங்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒரே நேரத்தில் தகுதியுள்ள அதிகபட்சம் இரண்டு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் தேர்வு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர் நடத்தும் பொதுநுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்.
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பொறுத்தும் சேர்க்கையின்போது சமர்ப்பிக்க தேவைப்படும் ஆவணங்களைப் பொறுத்தும் சேர்க்கை உறுதி செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் சேர்க்கை இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை (Information Brochure) கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்அதில் தகுதித் தரநிலைகள்இடஒதுக்கீட்டுக் கொள்கை, சேர்க்கை நடைமுறை. முக்கிய தேதிகள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் முனைவர் சுப்பிரமணியன், 05.08.2026 அன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் இணையவழி சேர்க்கை இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.08.2026 ஆகும்
மாணவர் சேர்க்கை தொடர்பான விளக்கங்களுக்கு
முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மின்னஞ்சல் : pgadmission@tnau.ac.in
கைபேசி: 94890 56710 தொடர்பு கொள்ளவும்.





