கோவையில் தீபாவளி ஸ்பெஷல்! வைர நகைகள் முதல் பட்டுப் புடவைகள் வரை ஒரே இடத்தில் கண்காட்சி!

கோவை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வைர நகைகள் முதல் பாரம்பரிய பட்டுப் புடவைகள் வரை ஒரே இடத்தில் தேர்வு செய்வதுடன், நேரடி இசைக் கச்சேரியையும் ரசிக்கும் வகையில் கோவை ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் பிரேமம் ஆபரணா மற்றும் பிரேமம் சில்க்ஸ் நிறுவனங்களின் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது.

பிரேமம் ஆபரணம் சார்பில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மற்றும் இயற்கை வைரங்களால் தயாரிக்கப்பட்ட மோதிரங்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள், நெக்லஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்பிலான நகைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றாடம் அணிவதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்புகள் முதல் பிரத்தியேகமான ஆடம்பர நகைகள் வரை பல்வேறு தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

அதேபோல், பிரேமம் சில்க்ஸ் சார்பில் 1,300-க்கும் மேற்பட்ட ரகங்களில் பாரம்பரிய பட்டுப் புடவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்கள், நெசவு முறைகள் மற்றும் கைவினை வேலைப்பாடுகளுடன் கூடிய புடவைகள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரத்யேகமாகத் தேர்வு செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஷாப்பிங்குடன் நேரடி இசைக் கச்சேரியையும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதுகுறித்து பிரேமம் ஆபரணம் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வர்ணமுகி ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐந்து மாதங்களுக்கு முன்பு கோவையில் பிரேமம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்களுடைய பட்டுப் புடவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

ஒவ்வொரு புடவையையும் கவனமாகத் தேர்வு செய்து, தீபாவளிப் பண்டிகைக்காகப் பிரத்யேக வடிவமைப்புகளுடன் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளோம்.

குறுகிய காலத்திலேயே பிரேமம் சில்க்ஸ் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது பிரேமம் ஆபரணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிராண்டும் மக்களின் மனதில் இடம்பிடிக்கும் என்று நம்புகிறோம்.

பிரேமம் ஆபரணத்தில் அன்றாடம் அணிவதற்கான எளிமையான நகைகள் முதல் விலை உயர்ந்த ஆடம்பர நகைகள் வரை பல்வேறு வகைகள் உள்ளன. இயற்கை வைரங்கள் மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான நகைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான நகைகளைப் பார்வையிட்டுத் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு- முழு திருப்தி இல்லை…

கோவை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்று சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வரவேற்பதாக சிஐடியு ஆட்டோ...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...