கோவையில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்- சிறை பிடித்த பொதுமக்கள்…

Advertisement

கோவை: ஒரே நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்குவதாகவும், இதனால் குறிப்பிட்ட இடைவேளையில் பேருந்துகள் வருவதில்லை என்றும் கூறி, அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் காந்திபுரம் முதல் கேரள மாநில எல்லையான வாளையார் பகுதி வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் குறிப்பிட்ட நேர இடைவேளையில் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வந்தன.

Advertisement

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அரசு பேருந்துகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், குறிப்பிட்ட நேர இடைவேளையில் பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்குவதால், குறிப்பிட்ட இடைவேளையில் பேருந்துகள் கிடைக்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இருப்பினும், பேருந்துகள் தொடர்ந்து அதே முறையில் இயக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நவக்கரை பகுதியில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஒரே நேரத்தில் பேருந்துகளை இயக்குவதால் அரசுக்கும் வருவாய் கிடைக்காது என்றனர்.

பொதுமக்களும் பேருந்துகளுக்காக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, பேருந்துகளில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பேருந்துகளை விட்டு இறங்கி, மாற்று வாகனங்கள் மூலம் தங்களது இடங்களுக்குச் சென்றனர்.

பேருந்துகளை முன்பு போலவே குறிப்பிட்ட நேர இடைவேளையில் இயக்க வேண்டும் என்றும், அதுதான் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் பறிபோகும் அபாயம்? கோவையில் 96 குடும்பங்கள் தவிப்பு!

கோவை சரவணம்பட்டியில் 9.54 ஏக்கர் நில விவகாரம் தொடர்பாக 96 குடும்பங்களின் நில உரிமை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குற்றச்சாட்டு

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...