மதுக்கரையில் மக்கள் தொடர்பு முகாம்- 3.45 கோடி மதிப்பில் நலத்திட்டம்…

கோவை: மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் 159 பயனாளிகளுக்கு 3.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம்பிச்சனூர் கிராமம்ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு 3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார்.

இம்முகாமில்,வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) மாருதிபிரியா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வாணிலட்சுமி ஜெகதாம்மாள், தாட்கோ பொது மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுமதி, மதுக்கரை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் தொடர்பு முகாம் மூலம் ஒவ்வொரு வட்டத்தில் ள்ள கிராமத்தை தேர்வு செய்து அந்த ஊரில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து மனுக்களாக பெற்று அதனடிப்படையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து மதுக்கரை வட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

Advertisement

இம்முகாமிற்கு ஏற்கனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ2,73,26,360 மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களும்20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 7 பயனாளிகளுக்கு காளான் வளர்ப்பு, பண்ணை குட்டை நுண்ணீர் பாசனம் உள்ளிட்ட 4,55,940/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்

Advertisement

வேளாண்மைத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.82,417 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் பிச்சனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், 10 பயனாளிகளுக்கு பயிர்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் ரூ.4,50,665. மதிப்பிலான கடனுதவிகளையும், தாட்கோ சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.62,12,813/- மதிப்பில் பயனாளிகள் ஆட்டோ, சுற்றுலா வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகையும், என மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ.3,45,28,195 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகளை பார்வையிட்டு, அரசு திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை. தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...