2027 இந்தியத் திறன் போட்டிக்கான பதிவு துவக்கம்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: 2027 இந்தியத் திறன் போட்டிக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகத்திறன் போட்டிகள் (World Skills Competition) ஷாங்காய், சீனா 2026ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் (India Skills Competition) 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியத்திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்ததுடன், உலகத் திறன் போட்டியில் (World Skills Shanghai China 2026) தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

Advertisement

இப்போட்டியின் மூலம் இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. மாவட்ட, மாநில, மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு உலகத் திறன் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும்.

16 முதல் 25 வயதுக்குட்பட்ட (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும்) கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இதர கல்வி நிறுவன மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியானவர்கள்
https://www.skillindiadigital.gov.in/india-skills.competition ல் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் போட்டிகள் தொடர்பான இதர விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டத்திறன் பயிற்சி அலுவலகம். கோயம்புத்தூர்-29. தொலைபேசி: 9488462613 அணுகலாம்
என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்
தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...