கோவை தடாகம் பகுதியில் வழிப்பறி- பெண் உட்பட மூன்று பேர் கைது…

கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கைப்பேசி ஆகியவற்றை வழிப்பறி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டை காண்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பன்னிமடையில் தனக்கு சொந்தமான இடம் உள்ளது என்றும் அதை விற்பனை செய்ய வேண்டும் என கூறி பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக அழைத்து சென்றுள்ளார்.

Advertisement

அப்போது பேபி தனது நண்பர்களான மோகன கிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 1-ம் தேதி மாலை அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

இது குறித்து சிவாகுமார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு மூன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...