கோவை: கோவை ஜிடி மேம்பாலத்தின் அருகில் அண்ணாமலைக்கு பெரிய அளவிலான போஸ்டர் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
நாளை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் முக்கியமான அறிவிப்பை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து அண்ணாமலை அவரது விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் உத்தம் அறக்கட்டளையின் தலைவரும் கோவை பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி கோவை மாநகரில் அண்ணாமலையின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு “தலைவா! தரணி ஆள வா..!” என்று குறிப்பிடப்பட்டு போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.
தற்போது அதனை ஜிடி மேம்பாலம் அருகே பெரிய அளவிலான கட் அவுட்டாக வைத்துள்ளனர்.
இதில் பாஜகவின் தாமரை சின்னமோ பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்களின் புகைப்படமோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


