அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைந்து கொண்டேன் என்று தெரிவித்தார்.

மூன்று புரட்சி ஒரே இலக்கு என்று கூறி அண்ணாவின் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, தற்பொழுது அமைதி புரட்சி என்று குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஜோசப் என்று முதல்வர் விஜய்யை கிண்டல் செய்து இந்துவா கிறிஸ்டினா என்பதை ஆயுதமாக கையில் எடுத்தவர்கள் எல்லாம் தற்பொழுது மாண்புமிகு என்று குறிப்பிட்டு பேசுகிறார்கள் என்று கூறினார். ஜாதிகள் ஒழிக்கப்பட்டு இருக்கிறது, பணம் இல்லாமல் ஒரு தேர்தலை தற்போது பார்த்திருக்கிறோம் என்றும் தெரிவித்த அவர் கோவையில் இந்த தொகுதியில் கூட ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார் ஆனால் தேர்தலில் விளிம்பில் தான் அவர் வெற்றி பெற்றார் அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்ட அவர் கரூரில் ஆயிரம் ரூபாய் தங்கமெல்லாம் கொடுப்பார் இங்கு 5000 ரூபாய் கொடுப்பார் என்று விமர்சித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கேவலமாக நடந்து கொள்கிறார் முதல்வரை தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக தெரிவித்த அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு வணங்கி தான் ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ராசா பேசுவது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை மாட்டி விடுவதற்கோ என்ற ஐயப்பாடும் ஏற்படுவதாக தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் நடந்தது கேவலமானது என்றும் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை என்றும் தனபாலை திமுகவினர் கொச்சைப்படுத்தியதை விளக்கினார். ராசா இது போன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வேறு விதமாக பேச வேண்டி இருக்கும் என்று கூறினார்.

Advertisement

அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்து வெளியில் வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் எந்தவொரு பயத்திற்கும் உள்ளாக வேண்டாம் உங்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்து தமிழக முதல்வருக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக தொடர்ந்து அவர்களது ஆதரவை அளிப்பார்கள் அது ஜனநாயகம் தலைப்பதற்கு அவர்கள் எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.

எஸ் பி வேலுமணி தமிழக வெற்றிக்கழகத்தில் இணையலாம் என்பது என்னுடைய கருத்து அவர் இணையலாம் இணையாமலும் போகலாம் ஏனென்றால் ஒரு பெரிய அறிவாளியின் கையில் அதிமுக மாட்டிக் கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து உலகில் ஒரு கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கையில் கொடுத்தால் போதும் ஆறே மாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கூட காலி செய்து விடுவார் என்று விமர்சித்தார்.

Advertisement

அதிமுகவை எஸ் பி வேலுமணி ஆகியோர் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருங்கள் இது என்னுடைய அன்பான வேண்டுகோள் ஏனென்றால் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக ஒழித்து விட்டார் தற்பொழுது அதிமுக எலும்புக்கூடு போல இருக்கிறது என்று விமர்சித்தார். மேலும் அதிமுகவை கையில் எடுத்து நடத்துவதற்கு எஸ் பி வேலுமணி தகுதி வாய்ந்தவர் என்றும் கூறினார்.

யானை பேரம் குதிரை பேரம் என்றெல்லாம் பேசுகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவினர் பேசி இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார்கள் மதுரை பொள்ளாச்சி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு இடங்களில் சகுனிகள் இருப்பதாக கூறினார். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் பதவிக்காக செல்லவில்லை என்றும் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் தற்பொழுது வரை பதவி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். அதிமுக எனும் மாபெரும் இயக்கம் அழிந்தே போய்விட்டது ஆனால் அரசியல் அனாதைகளாக வெளியில் நிற்பவர்களை அரவணைத்து செல்வது தமிழக வெற்றி கழகம் தான் என்றார்.

அதிமுகவில் இருந்து வந்தவர்கள் ஊழல் வாதிகள் என்று நாம் சொல்லிவிட முடியாது என்றும் அவர்கள் ஊழல் அற்றவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் அதுவரை நாம் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் வரும் என்ற நம்பிக்கையும் தனக்கு இல்லை அதற்குள் இந்த பாஜக ஆட்சி மாறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக ஆட்சி மாறும் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து பலரும் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு வரும் நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை இந்த ஆட்சியில் முடிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இந்த வழக்கு குறித்து முதல்வரிடம் நானே மனு கொடுப்பேன் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பழைய ஆவணங்கள் எல்லாம் தோண்டப்படும் என்று கூறி விட்டார்கள் இந்த ஆட்சியில் லஞ்சத்தை வைத்து யாரும் தப்பித்து விட முடியாது ஊழலுக்கு இந்த ஆட்சி துணை போகாது என்று தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகள் ஒழிய வேண்டும் என்பதில் இந்த அரசுக்கு மாற்று கருத்து இல்லை என்றார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...