கோவையில் பரபரப்பு சம்பவம்… ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர் – VIDEO

கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிய இளைஞரை பொதுமக்கள் உயிருடன் மீட்ட சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை இராமநாதபுரம் மேம்பாலத்தில் இன்று மாலை, பாலத்தின் வெளிப்புற தடுப்பில் இளைஞர் ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பதை கீழே சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் சத்தமிட்டு, மேம்பாலத்தின் மீது சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இதையடுத்து, மேம்பாலத்தில் இருந்த சிலர் விரைந்து சென்று, தொங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கைகளைப் பிடித்து மேலே இழுத்து உயிருடன் மீட்டனர்.

Advertisement

Also Read: உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்; பரபரப்பு வீடியோ வைரல்

இந்த பரபரப்பான மீட்பு சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்கப்பட்ட இளைஞரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக அந்த நிலையில் இருந்தார், இது தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் உடனடி விழிப்புணர்வும், துரிதமான செயல்பாடும் காரணமாக இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில், இளைஞர் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...