கோவை: சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம்ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி தவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க மாணவியர்கள் உலகளாவிய QS (குவாக்கரெல்லிசைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம். பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி மனிதநேயம் & கலை வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம் பொருளாதாரம் நிதிகணக்கியல், மனிதநேயபடிப்புகள் (Humanities) சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்துஎடுத்து முதுகலைப்பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 15.10.2026 க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம். முதல் தளம். சேப்பாக்கம், சென்னை 600 005.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





