SIR மீது காட்டம் கொண்ட சீமான்- கோவையில் ஆவேச பேட்டி…

கோவை- SIR திட்டம் மீது ஆவேசம் கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது என தெரிவித்தார். தார்ப்பாய்க்கு 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும் ஆனால் சமாதிக்கு எத்தனை கோடி செலவு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

நெல்லை தெருவில் போட்டு அதனை முளைக்க விடுவது தான் இவர்களின் சாதனை என்றும் விமர்சித்தார். தமிழகத்தில் விளைவித்த நிலை விட்டு விட்டு ஆந்திரா குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் அரிசி, வெல்லம் வாங்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 2000 கோடிக்கு பாலம், மெட்ரோ ரயில், விமான நிலையம் எல்லாம் கேட்டோமா? என கேள்வி எழுப்பியவர் ஒரு நாள் பட்டினி கிடந்து இறந்தால் தான் அனைத்தும் தெரியும் என தெரிவித்தார்.

கரூரில் உயிரிழந்தவர்களை பஸ் வைத்து மாமல்லபுரம் அழைத்து சென்று விஜய் சந்திப்பது குறித்தான கேள்விக்கு, அவர்களை சார்ட்டெட் விமானம் வைத்து அழைத்து செல்வதா என கேள்வி எழுப்பினார். மேலும் இது ஒரு கேள்வியா என கேள்வி எழுப்பிய அவர் விஜய் சந்திப்பது அவருடைய விருப்பம் நான் அதைப் பற்றி பேசுவதை அறுவெறுக்கிறேன் என தெரிவித்தார்.

Advertisement

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் பொழுது அரசு அதற்கு பொறுப்பேற்றதா அல்லது இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதா அரசு வேலை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய அவர் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றார்.

கலைஞர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் காலங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டிருந்தால் இந்த நெல்மணிகள் சாலைகள் கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பிய அவர் இந்த ஆண்டு மட்டும் எது நடக்கவில்லை ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நடக்கிறது என கூறினார்.

Advertisement

தண்ணீர் மாநாடு குறித்தான கேள்விக்கு கல்வி மருத்துவம் நீர் ஆகிய மூன்றும் என்றைக்கு விற்பனைக்கு வந்ததோ சந்தை பண்டமாக மாற்றப்பட்டதோ அது நாடல்ல சுடுகாடு என்று விமர்சித்தார். தண்ணீரை மனிதர்கள் கடையில் வாங்கி குடித்துக் கொள்வார்கள் ஆனால் விலங்குகள் பறவைகள் போன்றவை எல்லாம் என்ன செய்யும்? அதை நான் உணர்த்த வேண்டும் என கூறினார். சிப்காட் தொழிற்சாலைகள் அமைத்த இடத்தில் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அரசே கூறுகிறது ஆனால் மீண்டும் அதற்காக நிலத்தை அரசுதான் பறித்து தொழிற்சாலை கட்டுவதாக குற்றம் சாட்டினார். அடிப்படை உயிர் ஆகாரமான குடிநீர் எப்படி முதலாளியின் வியாபார பொருளாதாரம் மாறியது என்று கேள்வி எழுப்பினார்.

பிறக்கின்ற குழந்தை புற்றுநோய் உடன் பிறப்பதற்கு காரணம் நீரும் உணவும் சுவாசிக்கும் காற்றும் நஞ்சானது தான் அதனை ஆக்கியவர் யார்? அதற்குத்தான் அந்த தண்ணீர் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்தார். மனிதர்கள் இல்லாமல் மரம் வாழ்ந்து விடும் ஆனால் மரங்கள் இல்லாமல் உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது என்பதை கற்பிக்காத கல்வி எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்தின் SIR திட்டம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு அவரது கருத்தை வரவேற்பதாகவும், அதேசமயம் ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள் அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் என்றார்.

ஆனால் இங்குள்ள பல்வேறு சாதியினர் ஒன்றாக இல்லை என்றால் அவர்கள் இந்தி என்ற மொழியில் ஒன்றாக நின்று விடுவார்கள் பிறகு அனைத்தும் பாஜக வாக்குகளாக மாறிவிடும் காங்கிரஸ் வாக்குகளாக கூட மாறாது என தெரிவித்தார். அவர்களிடம் என்னுடைய அரசியலும் அதிகாரமும் சென்று விட்டால் தற்பொழுது உள்ள நிலத்திலிருந்தும் வெளியேற வேண்டிய அகதியாக மாறுவோம் என தெரிவித்தார். கோவையில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகள் வட இந்திய வாக்குகள் தான் என்றும் கூறினார்.

SIR குறித்து தமிழ்நாட்டரின் வாக்குகளை திமுகவினர் தான் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் கூறியது தொடர்பான கேள்விக்கு, திமுகவினரிடம் இருந்துதான் நாட்டையே பாதுகாக்க வேண்டி உள்ளது என்றார். மொழியை கொன்றது யார் அதனை அடமானம் வைத்தது யார் மண் மலையை எட்டி தின்றது யார் என்று கேள்வி எழுப்பினார்.

பணம் செல்லாது என்று கூறிய நிலைப்பாட்டில் வெற்றி பெற்றார்களா என்று கேள்வி எழுப்பிய அவர் ஊழல் லஞ்சம் ஒழியும் என்று கூறினார்கள் அப்படி இருந்தால் அமலாக்கத்துறை சோதனை எல்லாம் நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார். தீவிரவாதம் ஒழியும் என்று கூறினார்கள் அப்படி இருந்தால் ஏன் கொல்லுவாமா மற்றும் பகல்ஹாம் தாக்குதல்கள் நடைபெற்றது என கேள்வி எழுப்பினார். இதெல்லாம் தொடர்ந்து நடைபெறுகிறது என்றால் பொய் கூறினீர்கள் என்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கொண்டு வந்த பிறகு ஏன் ஒவ்வொரு தேர்தலிலும் வரியை குறைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மக்களை பாதிக்கிறது என்று வருகை குறைக்கிறார்கள் என்றால் மக்களை பாதிக்கும் வரியை ஏன் அமல்படுத்தினீர்கள்? மக்களை பாதிக்கும் வரியை அமல்படுத்தினால் அவன் ஆட்சியாளனா? அல்லது அநீதியாளனா? என கேள்வி எழுப்பினார்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த எம் ஜி ஆர், விஜயகாந்த், விஜய், கமலஹாசன் ஆகியோரெல்லாம் ரசிகர்களை சந்தித்தார்கள் நான் ரசிகரை சந்தித்தேனா என்று நீங்களே கூறுங்கள். என்னுடைய கட்சியில் யாராவது ரசிகர்களாக இருந்து வந்து சேர்ந்தார்கள் என்று கூறுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.