அதிகாரிகள் பணி திருப்திகரமாக இல்லை; வாக்களித்த பின் எஸ்.பி. வேலுமணி பேட்டி

கோவை: சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெல்லும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும், அவிநாசி தொகுதியையும் சேர்த்து மொத்தம் 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. நீலகிரி, திருப்பூர், கோவையில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்.

Advertisement

மக்கள் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் திருப்திகரமாக இல்லை. கவுண்டம்பாளையத்தில் இன்று காலையிலும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பேசி போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.

தேர்தல் ஆணையமும், போலீசாரும் வேகமாக செயல்பட வேண்டும். கோவை அமைதியான மாவட்டம்; ஆனால் இன்று வேறு மாதிரியான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- கோவையில் மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

கோவை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.