கோவை: கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரியில் வாக்களித்த அண்ணாமலை, டிரஸ் கோட் குறித்து கேள்விக்கு கலகலப்பாக பதில் அளித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களிக்க வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அவர் அணிந்திருந்த உடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “இன்று அணிந்திருக்கும் டிரஸ் கோட் ஏதேனும் அரசியல் குறியீட்டை குறிக்கிறதா?” என்று கேட்டனர்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அண்ணாமலை, “கடந்த ஐந்து வருடமாக இதே டிரஸ் கோடை தான் பயன்படுத்தி வருகிறேன். இதில் எந்த புதிய குறியீடும் இல்லை” என்று கலகலப்பாக கூறினார்.


