கோவையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பயன்பெற்ற மாணாக்கர்கள்…

கோவை: கோவையில் நடைபெற்ற மாணவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் 10 மாணவர்களுக்காக காசோலைகள் வழங்கப்பட்டன.

Advertisement

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நடைபெற்ற மாணவர் சிறப்பு குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து, 10 மாணாக்கர்களுக்கு ரூ.2,70,800/- கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆட்சியர் அலுவலகத்தில், மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கல்வி சார்ந்த (கல்விக்கடன். கல்வி உதவித்தொகை, சான்றிதழ்கள்பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு, மாணாக்கர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சங்கீதா. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, இணை இயக்குநர் (கல்லூரி கல்வித்துறை) செண்பகவள்ளி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லட்சுமி. பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை திட்டத்தலைவர் அஞ்சனகுமார் உள்ளிட்ட கல்வியாளர்கள் வங்கியாளர்கள் மாணாக்கர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, இன்று நடைபெற்று வரும் மாணவர் சிறப்பு குறைதீர் முகாமின் முக்கிய நோக்கமானது உயர்கல்வி சேர்க்கையில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்கி உரிய விளக்கங்களை அளிப்பதுதான் மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களை பார்வையிட்டு, கல்வி நிறுவனங்களின் விவரங்கள், பாடத்திட்டங்கள். பாடப்பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் கிடைக்கப்பெறும் என்றார்.

வங்கிகளில் கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகளையும் இம்முகாம்கள் மூலம் அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்றும் அதுமட்டுமல்லாமல், 12ம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் பள்ளி படிப்போடு நிறுத்தி விடாமல் உயர்கல்வியான கல்லூரி படிப்பு அல்லது தொழிற்திறன் வகுப்புகளிலும் சேர்ந்து படிக்க வேண்டும்எனவே. இந்த முகாமினை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி சார்ந்த உதவிகள் தேவைப்படும் மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள உயர்கல்வி கட்டுப்பாட்டு மையத்தை 9487047588. 9788858529 8754898863 ஆகிய எண்களில் தொடர்புக்கொள்ளவும்என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Advertisement

இம்முகாமிற்கு வருகை புரிந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ், கனரா, பாரத வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் அரங்குகளையும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தொண்டாமுத்தூர் மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் அரங்குகளையும் பார்வையிட்டு, கல்லூரிகளில் உள்ள இடங்கள். கல்லூரிகளிலுள்ள பாடப்பிரிவுகள் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட கல்வி மற்றும் வங்கிகள் சார்ந்த சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இம்முகாமில், 265க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் 22 பேர் கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், 7 பேர் தொழில் நுட்ப கல்லூரிகளிலும், 2 பேர் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், 2 பேர் சர்தார் வல்லபாய் படேல் டெக்ஸ்டைல் மேனேஸ்மெண்ட் கல்லூரியிலும் என மொத்தம் 33 மாணாக்கர்கள் நேரடி சேர்க்கை (ypexh கல்லூரியில் சேர்ந்துள்ளனர். முகாமிற்கு வருகை தந்த 150க்கும் மேற்பட்டோர் கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை விசாரித்து சென்றுள்ளனர்.

மேலும், இம்முகாமில் பல்வேறு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் 12 சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வங்கி மூலம் கல்விக்கடன் பெற விண்ணப்பித்தவர்களில் 12 மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி முக்கிய பகுதிகளில் 48 மணி நேர டிரோன் தடை அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...