கோவை: பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சம்பத்குமார் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்
தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் முன்னிலையில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்ப பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கோயமுத்தூர் மாவட்டத்தில் பேரூராட்சிகள் துறையின் சார்பி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளிலும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை, உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 15-வது நிதிக்குழு மானியம், அம்ரூத் 2.0, தூய்மை இந்தியா 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்களின் குறித்தும், குடிநீர் மேம்பாடு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, சாலை, பாலம், சமுதாய நலக்கூடம், பள்ளி வகுப்பறை, சுகாதார மையம் உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேரூராட்சிகளின் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து வகையான வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தரமாகவும், விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும், பொதுமக்கள் வழங்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்தவொரு கோரிக்கை மனுக்கள் மீதும் அதன் முக்கியத்துவம் கருதி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.




