சூலூர் சிறுமி வழக்கு- இருவர் மீதும் பாய்ந்த குண்டாஸ்…

கோவை: சூலூர் சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Advertisement

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதில் கார்த்திக் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பொழுது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோகன்ராஜிற்கு மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்நிலையில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பரிந்துரை செய்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் இன்று ஆஜர்படுத்தபட்ட மோகன்ராஜ்க்கு ஜூன் 5ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ஏர் ஹார்ன் பொருத்தி வந்த 26 பேருந்துகளுக்கு அபராதம்…

கோவை: கோவையில் ஏர் ஹார்ன் பொருத்தி வந்த 26 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் உக்கடம், பெரிய கடை வீதி போக்குவரத்து எஸ்ஐ.,க்கள் அசரப் அலி,...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...