தைப்பூசம் இறுதி நாள்- நிலாச்சோறு படைத்து கோவையில் வழிபாடு…

கோவை: தைப்பூசம் கடைசி நாளான இன்று நிலாச்சோறு படைத்து மக்கள் வழிப்பட்டனர்.

Advertisement

தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தைப்பூச முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாச் சென்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் சென்று முருகனை வழிபட்டனர்.

மேலும் திருக்கல்யாண நிகழ்வு தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. கோவையிலும் மருதமலை, அனுவாவி, காந்தி பார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவிலிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

தைப்பூசத்தின் கடைசி நாளான இன்று நிலாச்சோறு நிகழ்வை பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கொண்டாடினர். அதன்படி கோவை கணபதி, மணியக்காரன் பாளையம் பகுதியில் முருகனுக்காக நிலா சோறு படைத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

இதில் அப்பகுதியில் உள்ள ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் முருகனுக்கு உணவுப்படைத்து சுற்றி நின்று கும்மி அடித்து வழிபட்டனர். இதில் சிறப்பம்சமாக சிறுவனுக்கு முருகன் வேடம் அணிந்து கும்மியாடி வழிபாடு மேற்கொண்டனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.