கோவையில் கனிமங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க AI கேமராக்கள்…

கோவை: கனிமவளங்களை கொண்டு செல்வதை கண்காணிக்க கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

கனிமவளத்துறையின் சார்பில், கனிமங்கள் கொண்டு செல்வதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் நுண்ணறிவு திறன் கொண்ட 132 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கனிமவளத்துறையின் சார்பில் கனிமங்கள் கொண்டு செல்வதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் நுண்ணறிவு திறன் கொண்ட 132 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமம் வெட்டியெடுப்பது, கனிமம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1800-233-3995 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், மொபைல் செயலி முழு KOVAI MINING SURVEILLANCE என்ற பெயரிலும் மற்றும் இணையதளமும் (WEBSITE) உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement

எனவே,பொதுமக்கள் கனிமம் கடத்தப்படுவது தொடர்பான தங்கள் புகார்களை மேற்குறிப்பிட்ட மொபைல் செயலி மற்றும் இணைய வலைதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

மேலும், பேரூர் வட்டத்தில் உரிய அனுமதியின்றி கனிமம் வெட்டியெடுத்தது தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற அசல் வழக்கு எண் 27356/2019-ல் பகிரப்பட்ட தீர்ப்புரையின் ரூ.183 கோடி மதிப்பீட்டில் அனுமதியில்லாமல் கனிமங்கள் கொண்டு செல்வதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் நுண்ணறிவுதிறன் கொண்ட 132 கேமராக்கள் (108 AI ARTIFICIAL INTELLIGENCE கேமராக்கள் மற்றும் 24 ANPR AUTOMATIC NUMBER PLATE RECOGNITION கேமராக்கள்) பொருத்தப்பட்ட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் கண்காணிப்பு அறையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் மாவட்ட, வருவாய் கோட்டாட்சியர், கோயம்புத்தூர் தெற்கு, வருவாய் கோட்டாட்சியர், கோயம்புத்தூர் வடக்கு, சார் ஆட்சியர் பொள்ளாச்சி மற்றும் துணை காவல் காண்காணிப்பாளர் பேரூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு அறைகள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கண்காணிப்பு அறை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.