கோவை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை உட்கொண்டு ஆய்வு செய்த புதிய ஆணையாளர்…

கோவை: மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கான சமைக்கப்படும் சமையற்கூடத்தில் காலை உணவு திட்டத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் உணவுகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

உணவின் சுவை, தரம் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தோறும் விநியோகிக்கப்படும் உணவுகளின் அளவுகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை உட்கொண்டார்.

Advertisement

மேலும் அங்கு சமையல் செய்யும் சமையலர்களிடமும் தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா? கூடுதலாக தேவைப்படுகிறா என அனைத்தையும் கேட்டறிந்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.