கோவை திரையரங்கில் அவலம்- வீடியோ எடுத்த மக்களை மிரட்டிய ஊழியர்கள்…

கோவை: கோவையில் உள்ள திரையரங்கில் சுகாதாரமாக இல்லாததை கட்டி கேட்ட பார்வையாளர்களை மிரட்டிய ஊழியர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை தியேட்டரில் சுகாதாரமற்ற அவலத்தை மறைக்க ஊழியர்கள் அராஜகம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள “கல்பனா திரையரங்கில்” (Kalpana Theatre) கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றத்துடன் இருந்ததை மொபைல் போனில் வீடியோ எடுத்த சினிமா ரசிகர் ஒருவரை, தியேட்டர் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

தியேட்டர் நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கைக் கண்டு கொதித்தெழுந்த பார்வையாளர்கள், நேற்று நள்ளிரவில் தியேட்டர் மேலாளர் மற்றும் ஊழியர்களை முற்றுகையிட்டுப் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement

இடைவேளையின் (Interval) போது, தியேட்டர் வளாகத்தில் உள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்தப் பார்வையாளர் ஒருவர் சென்று உள்ளனர். அங்கு கழிவறைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி, அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் இருந்து உள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சினிமா ரசிகர் ஒருவர், டிக்கெட்டிற்கு இவ்வளவு காசு வாங்கும் தியேட்டர் நிர்வாகம், கழிவறையை இவ்வளவு கேவலமாக வைத்து இருக்கிறதே என்ற ஆதங்கத்தில், அங்கு உள்ள அவல நிலையைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். இதனைத் தற்செயலாகப் பார்த்து விட்ட தியேட்டர் ஊழியர்கள் சிலர், உடனடியாக அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு, “எப்படி நீ தியேட்டருக்குள் வீடியோ எடுக்கலாம் ?” எனக் கூறி மிரட்டி உள்ளனர்.

Advertisement

அந்த நபர் வைத்து இருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றதோடு, அவரை கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கழிவறை அசுத்தமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நபர் மீது தியேட்டர் ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதைப் பார்த்த மற்ற பார்வையாளர்கள் உடனடியாகத் தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களைச் ரசிகர்கள் திரண்டு, தியேட்டரின் பிரதான மேலாளரை முற்றுகையிட்டு பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வி கேட்டால் அடிப்பீர்களா?” என்று மேலாளரை நோக்கிப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

நேற்று இரவு தியேட்டருக்குள் பொதுமக்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இறுதியில் கவுண்டம்பாளையம் போலிசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.

@⁨vsprasanna31⁩

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...