இதுதான் கடைசி.. மன்னிச்சிடுங்க.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட RJ பாலாஜி!

இதுதான் கடைசி என அழுது கொண்டே ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் RJ பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Karupu

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கும் அரசின் அனுமதி பெறப்பட்டிருந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால், வெளியீட்டுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென ‘கருப்பு’ படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு படம் திட்டமிட்ட நேரத்தில் வெளியாகாததால் ரசிகர்கள் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு சென்றிருந்த சூழலில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Karupu Trisha

இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

அதில் அவர், “இது ‘கருப்பு’ படம் குறித்த கடைசி அப்டேட். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். வெகுதூரம் பயணம் செய்து காலை காட்சிக்காக தியேட்டருக்கு வந்த அனைவரிடமும் மனமார்ந்த சாரி. சினிமா என்பது வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து சிறிது நேரம் வெளிவர உதவும் ஒரு விஷயம். ஆனால் அந்தப் படத்தையே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

RJ Balaji

மேலும், “இந்த நிலையை நானும் எதிர்பார்க்கவில்லை. எல்லா பிரச்சனைகளும் சரியாகி மாலை 6 மணிக்குள் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘கருப்பு’ படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் கனவு கண்டிருக்கிறேன். இப்போது பேசும்போது கூட கண்களில் நீர் வருகிறது. ஆனாலும் எல்லா தடைகளையும் தாண்டி படம் இன்று வெளியாகும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

அதோடு, படத்தின் வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், “கருப்ப வறான்… வழி மறிக்காதீங்கன்னு சொல்றேன்… ஆனா நிறைய பேர் வழி மறிக்குறாங்க. இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி படம் வரும்” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...