நொய்டாவில் நடைபெறும் தொழிலாளர்கள் போராட்டம்- கோவையில் BSNL ஊழியர்கள் ஆதரவு…

கோவை: நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர், ஒப்பந்த ஊழியர், ஓய்வூதியர்கள் போராட்ட வாயிற்கூட்டம் நடத்தினர்

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் தொழிலாளர் மீது அடக்குமுறை ஏவும் பாஜக அரசை கண்டித்தும் கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர், ஒப்பந்த ஊழியர், மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள PGM அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Advertisement

நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மேலும்
நாடு முழுவதும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய தீர்வு காண வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26,000 வழங்கிட வேண்டும், காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற பெயர்களில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
ஒப்பந்த முறைக்குப் பதில் நிரந்தரப் பணியை உறுதி செய்ய வேண்டும்


எட்டு மணி நேர வேலை என்பதைச் சட்டப்பூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும்,
பெண் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளைப் பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்த வேண்டும்,
தொழிலாளர் நலனுக்கு எதிரான புதிய 4 தொகுப்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குடியரசு இதற்கு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில தலைவர் மகேஸ்வரன் வரவேற்பு உரையாற்றினார்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து 70 வயது மூதாடியின் நகை பறிப்பு

அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.