கோவை: மாணவர்களை மாஸ்டர்களாக உருவாக்குவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் உள்ள RVS தனியார் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் பட்டமளிப்பு விழா என்பது உங்களுடைய சிந்தனைகளையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வது சமூகத்தில் உங்கள் பங்காற்றலை உயர்த்துவது என்று தெரிவித்தார். உங்களிடம் ஏற்கனவே திறமைகள் உள்ளது அதனை செயல்படுத்துவதை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
கல்வி கற்றுக் கொடுத்து பட்டங்களை வாங்கி கொடுப்பது மட்டும் ஆசிரியர்களுக்கு போதாது என்றும் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கல்வி என்பது பாட புத்தகத்தை மட்டும் பயில்வது என்று இல்லானல் ஒவ்வொரு படிப்பிலும் ஆராய்ச்சி மனப்பான்மை முக்கியத்துவம் அதனை ஊக்குவிப்பது தான் தேசிய கல்விக் கொள்கை அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்த தலைமுறைக்கு எதுபோன்ற கல்வியை கொடுக்க வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை பார்க்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் நம்முடைய கல்விக் கொள்கை மாணவர்களை அடிமைகளாகவும் சர்வண்ட்டுகளாகவும் ஆக்காமல் மாஸ்டர்களாக உருவாக்க பார்க்கிறது என்றும் அதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமும் என்று தெரிவித்தார். மேலும் கல்லூரிகளில் ஆய்வு சார்ந்த கூட்டங்களும் தேவை என்றும் ஆய்வுகள் தான் புதிய பாதைகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டவர்கள் அளித்த அறிவு ஒன்றுதான் ஒரே அறிவு என்று இல்லை என்றும் இந்தியர்களிடமே அறிவும் திறமையும் கல்வியும் இருக்கும் பொழுது நாம் எதற்காக மற்ற நாட்டவர்களிடமிருந்து அதனை பின்பற்ற வேண்டும் நம்முடைய பாரம்பரிய கல்விமுறை தற்போதைய தொழில்நுட்பம் ஆகியவை கலந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றும் கூறினார்.
தற்பொழுது 90% வேலைவாப்பு 80% வேலைவாய்ப்பு என்பதெல்லாம் மாணவர்கள் படிப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு என்பதை மட்டுமே காட்டுகிறது என்றும் இது நாம் அடிமைகளையும் Service Sickers களையும் தான் உருவாக்குகிறோம் என்பதை காட்டுவதாக கூறிய அவர் படித்து முடித்தவுடன் வேலைகளை தேடுபவர்களாக இல்லாமல் தொழில்முனைவோர்களாக மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் நாம் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் நீங்கள் இதற்குப் பிறகு என்னவாக ஆக வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் மாஸ்டர்களாக உருவாக வேண்டுமே தவிர அடிமைகளாக ஆகக்கூடாது நீங்கள் உங்களுக்காக உழைக்க வேண்டும் தொழில் முனைவோர்களாக மாறுவதற்காக உழைக்க வேண்டும் அதற்காக ரிக்ஸ் எடுக்கலாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுங்கள் எதுவாக இருந்தாலும் நாளை என்று தள்ளிப் போடாமல் தற்பொழுது இருந்தே செயல்பட துவங்குங்கள் என்று அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.





