ரசிகர்களை கவர காத்திருக்கும் இந்த வார OTT வெளியீடுகள்

ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பல்வேறு வகையான OTT வெளியீடுகள் ரசிகர்களை கவர காத்திருக்கின்றன. திகில், நகைச்சுவை, க்ரைம், ஃபேமிலி ரியாலிட்டி ஷோக்கள், காதல் சீரிஸ் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர்கள் என பல்வேறு வகை வெளியீடுகள் OTT தளங்களில் வெளியாகின்றன. இவற்றில் சில வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய பிறகு டிஜிட்டல் தளங்களில் அறிமுகமாகின்றன. சில நேரடியாக OTT தளங்களுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய படைப்புகளாக உள்ளன.

நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, இந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கருப்பு” படம் சூர்யாவிற்கு மிக முக்கியமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. அதோடு, இந்த ஆண்டின் தமிழின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. மாஸான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படம் அதிரடியான காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களால் நிறைந்துள்ளது. ஜூன் 12ஆம் தேதி முதல் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படலாம் என தகவல் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இயக்குநர் பிரியதர்ஷனுடன் மீண்டும் இணைந்துள்ள அக்ஷய் குமார் நடித்துள்ள திரைப்படம் “பூத் பங்களா”. திகிலும், நகைச்சுவையும் கலந்ததாக இப்படம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமப்புறத்தில் உள்ள மர்மமான ஒரு மாளிகையை வாங்கும் நபர், அந்த இடத்தில் ஒரு சாபம் இருப்பதை அறிகிறார். குடும்பத்தில் திருமண ஏற்பாடுகளைச் செய்யும் போது விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அது குறித்து விசாரிக்கும் போது, கடந்த கால ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. தபு, வாமிகா கப்பி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 12ஆம் தேதி Netflix-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்காக வெளியாக உள்ள புதிய சீரிஸ் தான் “ராக்”. 1970களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையுடன் தொடங்கி, குழந்தைகளை மையமாகக் கொண்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சதியாக மாறுகிறது. விசாரணை ஆழமாக செல்லச் செல்ல பல இருண்ட உண்மைகள் வெளிவருகின்றன. சோனாலி பெந்த்ரே, அலி பைசல் மற்றும் அமீர் பஷீர் நடித்துள்ள இந்த தொடர் ஜூன் 12ஆம் தேதி Prime Video-வில் வெளியாகிறது.

ஷில்பா ஷெட்டி குந்த்ரா தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ “மா ஹை நா”, ஜெனரேஷன் Z பிரபலங்களையும் அவர்களது தாய்மார்களையும் ஒன்றாக இணைக்கிறது. சமையல் போட்டிகள், மனம் திறந்த உரையாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மூலம் குடும்ப உறவுகள் மற்றும் தலைமுறை வேறுபாடுகளை சுவாரசியமாக வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி ஜூன் 12 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

பிரபல நாவலான “Every Summer After” ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “Every Year After”, நட்பு, காதல் மற்றும் இரண்டாம் வாய்ப்புகளை மையமாகக் கொண்ட ஒரு லவ் சீரிஸ். சிறுவயது நண்பர்களான இருவரின் வாழ்க்கைப் பயணத்தையும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வுகளையும் விவரிப்பதே இந்த சீரிஸின் கதை. இந்த சீரிஸ் ஜூன் 10ஆம் தேதி Amazon Prime Video-வில் வெளியாகிறது.


Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.