கோவை மாநகராட்சி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

கோவை: கோவையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், மாநகராட்சி வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளான பிறப்பு. இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி. மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், நகரமைப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் படி, மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில். மண்டல வாரியாக நிலுவையில் உள்ள பணிகளுக்கான கோப்புகள் குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள்

பாதாள சாக்கடை, தார் சாலைகள், திடக்கழிவு மேலாண்மை சார்பில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களின் எண்ணிக்கை, தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை என மண்டல வாரியாக விவாதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...