கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவுகளுக்கான 2026-2027 கல்வியாண்டு இளமறிவியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஒரே இணையதள விண்ணப்பத்தின் மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு மே 6ம் தேதி முதல் தொடங்கியது. வருகிற ஜூன் 8-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read news: பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
மாணவர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவில் 3 பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஒருங்கிணைந்த விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பட்டுவளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுடன், வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
Read news:கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?
பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ.300 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான பதிவு, தரவரிசைப் பட்டியல், இணையவழி கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்வியாண்டில் TNAU உறுப்பு கல்லூரிகளில் 2516 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4736 இடங்களும் மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:-
- இளமறிவியல் (மேதமை) வேளாண்மை
- இளமறிவியல்(மேதமை) தோட்டக்கலை
- இளமறிவியல் (மேதமை) வேளாண்மை (தமிழ்வழி)
- இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை (தமிழ்வழி)
- இளமறிவியல் (மேதமை) வனவியல்
- இளமறிவியல் (மேதமை) உணவு, மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை
- இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு மற்றும்
- இளமறிவியல் (மேதமை) வேளாண் வணிக மேலாண்மை வேளாண்மை தொழில்நுட்ப கல்வி பாடப்பிரிவுகள்
- இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்)
- இளம் தொழில்நுட்பம் (உணவுத் தொழில்நுட்பம்)
- இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்)
- இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்)
- இளம் தொழில்நுட்பம் (உயிரித் தகவலியல்) மற்றும்
- இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தகவல் தொழில்நுட்பம்)
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவை அனுப்பி உதவிடுங்கள்.



