பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான யு.ஜி., பி.ஜி. மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

NAAC அங்கீகாரத்தில் A++ தரச்சான்று பெற்றுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பல்கலைக்கழக துறைகளில் வழங்கப்படும் B.Sc (Blended) Physics, Chemistry, Biosciences, B.P.Ed., B.Voc Multimedia and Animation, Business Process and Data Analytics உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கும், M.A., M.Sc., M.Com., M.C.A., M.Ed., M.P.Ed., Master of Library and Information Science மற்றும் PG Diploma படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Read news:கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

Advertisement

மாணவர்கள் http://www.b-u.ac.inஎன்ற பல்கலைக்கழக இணையதளத்தில் அல்லது https://fms.b-u.ac.in/admission/ என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி வருகிற 15-05-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

ஒவ்வொரு படிப்பிற்கும் பதிவு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.200 மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு சமூகச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

Read news: கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பப் பிரதியுடன் SSLC, HSC, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ. படிப்புகளுக்கான சேர்க்கை TANCET தேர்வு மற்றும் TNMBA கலந்தாய்வு மூலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவை அனுப்பி உதவிடுங்கள்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.