கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறி இருந்த நிலையில் நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது.மேலும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

அதன்படி எங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடம் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

Read news: பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

அந்த விவரம் பின்வருமாறு:-

Advertisement

கோவை விமான நிலையம் சுற்று வட்டாரப் பகுதிகள் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர்,

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர், போத்தனூர் ரயில் நிலைய சுற்று வட்டார பகுதிகளில் ஜீரோ புள்ளி 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர்,

ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.