கோவை: இன்று செயிண்ட்ஜார்ஜ் கோட்டை நாளை செங்கோட்டை என தவெக ஒட்டிய போஸ்டர்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமான TVK சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
செங்கோட்டை மற்றும் அரசியல் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டர்கள், அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் “இன்று செயிண்ட்ஜார்ஜ் கோட்டையில் ஏற்றிய கொடி நாளை செங்கோட்டையில் வெற்றி கொடி ஏற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலையோரங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பேசிக்கொண்டு செல்கின்றனர்.அந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருவதால், அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.


