உலக யானைகள் தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி!

கோவை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை மற்றும் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு, யானைகளின் ஓவியங்களோடு, அவற்றின் அவசியங்களை எடுத்துரைத்தவாறு பேரணியாகச் சென்றனர்.

Advertisement

யானைகள் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் வனத்துறை சார்பில் யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே கோவை மாவட்ட வனத்துறை மற்றும் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு சார்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisement

உதவி வனப்பாதுகாவலர்விஜயகுமார், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிவ கணேஷ் ஆகியோ தொடங்கி வைத்த இந்த பேரணியில், வனத்துறையினர், வன ஆர்வலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, யானைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.

மேலும், யானைகள் உயிர் வாழ்தலின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்

Advertisement
Coimbatore World Elephant Day awareness rally

இதுகுறித்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிவகணேஷ் கூறுகையில்,

“யானைகளை பாதுகாப்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதன் காரணமாகவே யானைகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது” என்றார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நெருங்கி வரும் சுதந்திர தினம்- கோவையில் பாதுகாப்பு தீவிரம்…

கோவை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.