கோவையில் ஓடைக்கு சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்

கோவை: கோவையில் 75 வயது முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் கந்தே கவுண்டன்சாவடி அடுத்த புதுப்பதி கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் நடராஜ்(75). இன்று காலை வழக்கம் போல் அருகில் உள்ள ஓடை பகுதிக்கு காலைக்கடனை கழிப்பதற்கு சென்றுள்ளார். அந்நிலையில் அவ்வழியாக வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர் மேலும் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த வனப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருப்பதால் வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...