கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் சாய்ந்த மரம்- வாகனங்கள் சேதம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பூங்கை மரம் வேரோடு சாய்ந்து அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் அடைந்தன.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே bsnl அலுவலக வளாகம் உள்ளது. அதற்கு பின்னால் தாமஸ் கிளப் உள்ளது. அந்த வளாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கும் இடையில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வளாகத்திற்குள் பல்வேறு மரங்கள் செடி கொடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த வளாகத்தில் இரும்பு வேலியை ஒட்டி இருந்த பெரிய பூங்கை மரம் ஒன்று வேரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சாய்ந்தது. அப்பொழுது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனம் மற்றும் தனிநபர் கார்களின் மீது மரம் விழுந்ததால் இரண்டு மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை?- கோவை ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை…

கோவை: கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தனியார்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.