பொன்ராஜ் மீது தவெக கோவையிலும் புகார்- கைது செய்ய வலியுறுத்தல்…

கோவை: பொன்ராஜ் மீது தமிழக வெற்றி கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் அணி சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Advertisement

இது குறித்து பேட்டி அளித்த விக்னேஷ் தமிழக வெற்றி கழகத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளதால் திமுகவினரும் திமுகவை சார்ந்தவர்களும் இதுபோன்று விமர்சனங்களை முன் வைப்பதாக குற்றம் சாட்டினார். இது போன்று பெண்கள் குறித்த ஆபாசமாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொன்ராஜை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...