குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் பலி; சூலூர் அருகே பரிதாபம்!

கோவை: மீன் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் டி.வி.கே நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுஜித் குமார் (11).

அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் பிரதோஷ் (11). இவர்கள் இருவரும் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள கதிர்மில் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தனர்.

Read also எரிவாயு தட்டுப்பாடு- கோவையில் பள்ளியின் அழுத்தத்தால் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…

Advertisement

இப்பள்ளியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வந்ததால், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தான் பள்ளி தொடங்க இருந்தது.

இதன் காரணமாக, நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற மாணவர்கள் இருவரும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் குளத்தில் இரு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது, அது காணாமல் போன சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

Read also கோவையில் பிங்க் பேட்ரோல் மூலம் 55 சிறுவர்கள், முதியவர்கள் மீட்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...