சூலூர் எம்.எல்.ஏ முன்பே தகராறில் ஈடுபட்ட தவெகவினர்- பெண் மருத்துவமனையில் அனுமதி…

கோவை: சூலூர் அருகே எம்.எல்.ஏ விற்கு வரவேற்பு கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது

Advertisement

கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்(தவெக) நேற்றிரவு கணியூர் பகுதியில் பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்துள்ளார்.

அங்கு திரண்ட தவெகவினர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்ற போது அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, தவெகவை சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால் MLA சுகுமார் முன்பே இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேசி கொண்டு இருந்த போதே தவெகவினர் இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதனால் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து இரு தரப்பு தவெகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

அதில், தன்னை தவெக நிர்வாகிகள் தாக்கியதாக அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்த மோதல் விவகாரம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...