“Hornbill Vote Wave 2026” மூலம் தேர்தல் விழிப்புணர்வு; கோவையில் 1,445 மாணவர்கள் சாதனை

கோவை: கோவையில் யுனைடெட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,445 பேர் இணைந்து ஹார்ன்பில் பறவையின் மனிதச் சங்கம உருவத்தை அமைத்து தேர்தல் விழிப்புணர்வில் சாதனை படைத்தனர்.

Advertisement

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பொறியியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஹார்ன்பில் என்னும் இருவாட்சி பறவையின் உருவத்தை மனிதச் சங்கம வடிவில் அமைத்தனர்.

ரோட்டரேக்ட் கிளப் ஆஃப் யுஐடி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் 1,445 மாணவ, மாணவிகள் இணைந்து பங்கேற்றனர். இதனை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23, 2026 தேர்தலை முன்னிட்டு, வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஹார்ன்பில் என்னும் இருவாட்சி பறவையை அடையாளமாகக் கொண்டு, கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பொறியியல் கல்லூரியில் “HORNBILL VOTE WAVE 2026” – வாக்குரிமை விழிப்புணர்விற்கான தேசப்பற்று மிக்க பெருங்கூட்டம் என்ற தலைப்பில் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பறவையின் உருவத்தை மனிதச் சங்கம வடிவில் அமைத்தனர்.

Advertisement

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இணைத் தலைவர் டாக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக துணை கலெக்டர் சன்கீத் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு, வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

ரோட்டரேக்ட் கிளப் ஆஃப் யுஐடி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், 1,445 மாணவ, மாணவிகள் இணைந்து வலிமை, ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் ஹார்ன்பில் பறவையின் உருவத்தை உருவாக்க ஆர்வமுடன் பங்கேற்று, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

Advertisement

இதனை வெங்கடேசன் தலைமையிலான ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினரும் பார்வையிட்டு, சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.

இந்த நிகழ்வின் மூலக் கருத்து வடிவமைப்பாளராகவும், முழுமையான திட்டமிடலின் பின்னணிச் சக்தியாகவும், மாணவர் நலத்துறை டீன் டாக்டர் ஷர்மிளா செயல்பட்டார்.

இந்நிகழ்வில் ட்ரோன் நிபுணர் வீர விஷ்ணு, ரோட்டேரியன்கள் மற்றும் ரோட்டராக்டர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, இந்த சாதனையை பாராட்டினர்.

“Hornbill Vote Wave 2026” நிகழ்வு, இளைஞர்களிடையே வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது. யுஐடி மாணவர்களின் ஒற்றுமை, நாட்டுப்பற்று மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...