கோவையில் சுகாதார துறையில் காலிப்பணியிடங்கள்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: கோவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

கோவை மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் தற்காலிக நியமனம் நடைபெற உள்ளது.

Lab Technician Gr-III – 3
Occupational Therapist (DEIC) – 1
District Programme Manager – 1
RMNCH.A Counsellor (பெண்கள் மட்டும்) – 2, Assistant cum Data Entry Operator / DEO – 1, ULB-UHN / ANM – 75, Cleaner – 2 உள்ளிட்ட இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 15.09.2026 அன்று மாலை 5:00 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...