கோவையில் த.வெ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!!

கோவை: தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் திரண்டிருந்த த.வெ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“முதல்வர் விஜய்”, “தளபதி வாழ்க” என முழக்கங்களை எழுப்பியபடி உற்சாகமாக கொண்டாடினர்.

அதேபோல், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் அலுவலகம் முன்பாக பிரம்மாண்டமான எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement
vijay cm

அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

திரையில் ‘தளபதி’ விஜய்யை கண்ட தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து முனையம்- தலைமை செயலாளருக்கு கடிதம் அளித்த அமைச்சர் விக்னேஷ்…

கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்க தலைமை செயலாளரிடம் அமைச்சர் விக்னேஷ் கடிதம் வழங்கினார். கோவை மாநகர் வெள்ளலூர் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து முனையம் கட்டப்பட்ட நிலையில்...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.