ஊழலை ஒழிப்பதாகக் கூறிய விஜய்க்கு அபராதம் உறுதி!

கோவை: புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் 15 கோடி ரூபாயை மறைத்ததாக விஜய்க்கு விதிக்கப்பட அபராதத்தை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற விஜய் பின்னடைவை சந்தித்தார். இதனிடையே, புலி பட விவகாரத்திலும், வருமான வரித்துறையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற விஜய், அதிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

vijay puli problem

புலி படத்திற்கு வாங்கிய சம்பளத் தொகையில் ரூ.15 கோடியை மறைத்ததாக நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு வருமானத்துறை ரூ.1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

Advertisement

இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

vijay

அதில், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தான் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது என்று கூறிய உயர்நீதிமன்றம், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்று கூறியதோடு, அவர் அந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisement

இதற்கு எதிரான விஜய் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...