கோவை: விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள்
உரையாடல்- 2027ல் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்க அனுப்பி விடுக்கப்பட்டுள்ளது.
(VBYLD) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் மேரா யுவ பாரத் (MY Bharat) மூலம் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் 2027 என்ற தேசிய அளவிலான இளைஞர்களுக்கான முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்று, விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) 2047 என்ற இலக்கை நோக்கிய தங்களது கருத்துகள் மற்றும் புதிய சிந்தனைகளை முன்வைக்க இது ஒரு தளமாக அமைகிறது.
15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் VBYLD 2027-ல் பங்கேற்க தகுதியுடையவர்கள். இத்திட்டம் மாவட்ட அளவில் தொடங்கி, மாநில அளவில் தொடர்ந்து, இறுதியாக புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான உரையாடல் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது.
VBYLD 2027-ன் முதல் கட்டமாக விக்சித் பாரத் வினாடி வினா (Viksit Bharat Quiz) 17.08.2026 முதல் 30.09.2026 வரை mybharat.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் நடைபெறுகிறதுவினாடி வினா மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் விக்சித் பாரத் கட்டுரைப் போட்டி (Viksit Bharat Essay Challenge), மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் (District Championship) கட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர். இதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான கட்டங்கள் நடைபெறும்.
மேலும், VBYLD 2027-ல் விக்கித் பாரத் சவால் (Viksit Bharat Challenge) கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு (Cultural Track), பாரதத்திற்கான வடிவமைப்பு (Design for Bharat), சமூக நலனுக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் (Hack for Social Cause), இளம் தொழில்முனைவோர் சவால் (Youth Entrepreneurs Challenge) மற்றும் இளைஞர் நாடாளுமன்றம் (Youth Parliament) ஆகிய ஆறு முக்கியப் பிரிவுகள் இடம்பெறுகின்றன.
VBYLD 2027-ன் தேசிய அளவிலான இறுதி நிகழ்வு 2027 ஜனவரி 10 முதல் 12 வரை புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்படும் இளம் தலைவர்கள் தங்களது கருத்துகள்திறமைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை தேசிய அளவில் முன்வைக்கும் வாய்ப்பைப் பெறுவர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியுடைய இளைஞர்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விக்சித் பாரத் வினாடி வினாவில் அதிக அளவில் பங்கேற்று VBYLD 2027-ன் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை வழங்குமாறு மாவட்ட இளைஞர் அலுவலர் (மேரா யுவ பாரத்(MY Bharat) விக்ணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.





