கோவை: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஒருகோடி தொண்டர்களுடன் ஆட்சி அமைத்து, கட்டிக்காத்த கட்சியை காப்பாற்ற முடியாதவர் எடப்பாடி பழனிசாமி. இனி முதலமைச்சர் கனவு அவருக்கு கனவாகவே இருக்கும் என்று சூலூர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சூலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட கண்ணம்பாளையம் பாரதி நகர் அருகே, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை மற்றும் தெருவிளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன, இந்த பணிகளை மேற்கொள்ள
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனந்த் முதல் கையெழுத்திட்டுள்ள நிலையில், ரூ.1.70 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது.
இங்கு சாலை அமைப்பதுடன் 24 தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேலும், குளத்தில் கார் விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சூலூர் தொகுதி பரப்பளவில் பெரிய தொகுதியாக இருப்பதால், கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சூலூரில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், சூலூரில் கலைக்கல்லூரி அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் முதலமைச்சராக முடியாது. அதனால் தனது இயலாமையை வெளிப்படுத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஒருகோடி தொண்டர்களுடன் ஆட்சி அமைத்து, கட்டிக்காத்த கட்சியை காப்பாற்ற முடியாதவர் எடப்பாடி பழனிசாமி. இனி முதலமைச்சர் கனவு அவருக்கு கனவாகவே இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக ஆட்சியை கலைக்க யாரும் கனவு கூட காண முடியாது என்றும் சுகுமார் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முதுகில் ஏறி திமுக ஆட்சி அமைத்தது, ஆனால் எங்கள் கூட்டணியில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அழைக்கப்படுகிறது.
அடுத்த பிரதமர் விஜய் என்று, தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தெரியாமல் பேசியிருக்கலாம். நாங்கள் ஆட்சி அமைத்து 114 நாட்கள் தான் ஆகிறது. எந்த இடத்திலும் விஜய் அகலக்கால் வைக்க மாட்டார். தேவையில்லாமல் ஒரு சிலர் அந்த விவகாரத்தை பிரச்சனையாக்ககி வருகிறார்கள்.
குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருப்போம்.
எம்.எல்.ஏ.க்கள் மக்களை எளிதில் சந்திப்பதற்கு கார் அவசியம், பல எம்.எல்.ஏ.க்கள் வாடகை காரில் செல்லும் நிலை இருக்கிறது. நான் அந்த காரை வாங்குவேன்.
என்றார்.





