கோவை மேம்பாலத்தில் திருமண போட்டோ சூட்- வலுக்கும் புகார்கள்…

கோவை: கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் திருமணம் முடிந்த பிறகு, காரில் பேரணி சென்ற இளைஞர்கள், காரில் ஆபத்தான முறையில் நின்றபடி போட்டோ சூட் எடுத்து சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது

Advertisement

கோவை இராமநாதபுரம் மேம்பாலத்தில் திருமணம் முடிந்த பிறகு காரில் நின்றபடி போட்டோ சூட் எடுத்து இதர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.

கோவை மாநகர் ராமநாதபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் காரில் கதவில் தொங்கியபடி திருமணத்திற்கான போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது.

காலில் ஜன்னல் வழியாக உடலை வெளியே நீட்டி மணமகனுக்கு போட்டோ சூட் நடத்தி உள்ளனர் சில இளைஞர்கள்.

Advertisement

திருமணம் முடிந்த கையோடு 10க்கும் மேற்பட்ட கார்களில் பேரணியாக சென்ற இளைஞர்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் கார்களீல் வெளியே தொங்கிய படி சென்றுள்ளனர்.

மேலும், கார்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளன. இதனால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

இது போன்று போக்குவரத்திற்கான பாலத்தை போட்டோ சூட்டிற்காக பயன்படுத்துபவர்கள் மீது போக்குவரத்து காவல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜூலை 22 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்

ஜூலை 22, 2026-க்கான இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்குமான தொழில், பணம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பலன்களுடன் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கான சந்திராஷ்டமம் விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...