கோவை: கோவையில் காரை தாக்க முயன்ற யானையின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ள நிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலை சாலையில் சாலை ஓரம் இரண்டு மூன்று காட்டு யானைகள் நின்று கொண்டிருந்துள்ளன.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் யானையை கடக்காமல் முன்பே நின்று யானைகளை வீடியோ பதிவும் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் யானை இருப்பதை தெரிந்தும் காரை இயக்கி உள்ளார். அப்பொழுது யானை அருகில் சென்ற பொழுது திடீரென பிளிறி கொண்டு காரை தாக்குவதற்கு முயன்றுள்ளது. உடனடியாக அவர் காரை வேகமாக இயக்கியதால் தப்பித்தார்.
தற்பொழுது அந்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.




