கோவை மாவட்டத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது

கோவை : கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனைக்காக பேருந்தில் கொண்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு… போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதன் ஒரு பகுதியாக, கடந்த 28.07.2026 அன்று கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாருக்கு, பேருந்தில் கஞ்சா விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் அரசம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹபீபுல்லா (27), முகமது முகைதீன் (25), முகமது காதீர் (40), முகமது வாசிம் (47), முகமது மஜேபுல் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also read: தமிழ்நாடு பட்ஜெட் சீக்ரெட்- அமைச்சர் செங்கோட்டையன்…

இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (Nizhal) QR குறியீடு பாதுகாப்பு தளத்தின் மூலம் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகியவற்றிலும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு; சித்தாபுதூரில் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோவை சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தாள்கள் மட்டும் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...