டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் மோசடி- இளைஞர் கைது…

கோவை: டேட்டிங் செயலி மூலம் திருமண மோசடி செய்து கோவையைச் சேர்ந்த பெண்ணிடம் 2 கோடி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமார் ரூ.2 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (36). இவர் அப்பகுதியில் கால்பந்து அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குப் ‘பம்பிள்’ (Bumble) எனப்படும் டேட்டிங் செயலி மூலம் கோவையைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பவைத்த விக்னேஷ்வரன், அவரிடம் இருந்து சுமார் ரூ. 2 கோடி வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளார். மேலும், அவரிடம் இருந்து கார் மற்றும் ஐபேட் (iPad) போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கி உள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...