கோவை வந்த கூடுதல் வந்தே பாரத் ரயில்- உற்சாக வரவேற்பு

கோவை: கோவை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இன்று எர்ணாகுளம்- பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். அந்த ரயிலானது கோவை வழியே செல்லும் நிலையில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


முதல் நாளான இன்று எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சிறப்பு வந்தே பாரத் ரயில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்ததும் ரயில் பயணிகள், தொழில்துறையினர், கல்லூரி மாணவர்கள், பாஜகவினர் என பலரும் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், சேலம் கோட்டை ரயில்வே மேலாளர் பண்ணா லால், கூடுதல் மேலாளர் சரவணன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் ரயில்வே அலுவலர்கள் சார்பில் தேசப்பற்றுமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் வந்தே பாரத் ரயில் சேவை குறித்து அரசு தரப்பில் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், இந்த சேவை பலதரப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் சாதாரண ரயில் சேவைகள் குறித்தும் மக்களிடம் கோரிக்கைகள் உள்ளது குறித்தான கேள்விக்கு அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய கூடுதல் மேலாளர் சரவணன் இந்த ரயில்வே சேவை மூலம் குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவையெல்லாம் முடிந்ததும் மக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். போத்தனூர் ரயில் நிலையம் 98 கோடி செலவில் டென்டரில் உள்ளது என தெரிவித்த அவர், இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் அது செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் தற்பொழுது 8 பெட்டிகள் உள்ள நிலையில் அதனை 16 பெட்டிகளாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது அதற்கான பல்வேறு கோரிக்கைகளும் மக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ளது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.