கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதியினருக்கு புதிதாக தார் கார் வாங்கி கொடுத்துள்ளனர். இருந்த போதிலும் மணமகன் தனது பண்ணை வீட்டுக்கு தான் மூதாதையர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியிலேயே புதுமண பெண்ணை அமர வைத்து அவரே மாட்டு வண்டியை ஓட்டி வீட்டுக்கு சென்றார்.
இவர்களுடன் உறவினர்கள் காரில் அணிவகுத்து பின்னே சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை அனைவரும் வியப்புடன் பார்த்து வாழ்த்தி சென்றனர்.


