தாக்கிய ஆசிரியர்கள்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவை: ஆசிரியர்கள் திட்டி தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பள்ளி மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துவேல் குமரன்- வல்ஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் முத்து சஞ்சனா வால்பாறை ரொட்டி கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி முத்து சஞ்சனா, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். பலத்த தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் முத்து சஞ்சனாவை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இதனிடையே சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இரவு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, பள்ளி ஆசிரியர்கள் மூவர் தான் காரணம், சக மாணவர்கள் முன்பு தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர் என்று மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இது குறித்து சிகிச்சையில் இருந்த பொழுது மாணவி அளித்த வாக்குமூலத்தின் வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், அறிவியல் ஆசிரியர், தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் ஆகியோர் தன்னை சரியாக படிக்கவில்லை என்று கூறி பரீட்சை அட்டையை தூக்கி வீசியதாகவும் கன்னத்தில் அறைந்ததாகவும் முட்டி போட வைத்து பனிஷ்மென்ட் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த மாணவியின் பெற்றோர் இனி இது போன்று ஒரு நிலை வேறு எந்த குழந்தைகளுக்கும் வந்துவிட கூடாது என்றனர்.

இது குறித்து பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, இது குறித்து ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு பிரத்யேக வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.