கோவையில் ஒரு தலைக் காதலால் சோகம்; இளைஞர் விபரீத முடிவு!

கோவை: கோவையில் ஒரு தலைக் காதலால் இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் அவரது நண்பர்கள், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 19). இவர் வடகோவை பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கோகுல், உறவுக்கார பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

அந்த தகவல் அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது. அவர் கோகுலைக் கண்டித்து வந்துள்ளார். இதற்கிடையே கோகுல் காதலித்து வந்த பெண்ணுக்கு கடந்த 23ம் தேதி வேறுறொருவருடன் நிச்சயம் நடந்தது.

இதனால் மனவேதனை அடைந்தவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று அவரது தாய் வழக்கம் போல வேலைக்கு சென்றார்.

மதியம் வீட்டிற்கு உணவருந்த வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாகியும் கோகுல் கதவை திறக்காததால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கோகுல் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார்.

உடனே அவர் அக்கம் பக்கத்தினை உதவுக்கு அழைத்து கதவை உடைத்து மகனை மீட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல. இதுபோன்ற எண்ணங்கள் தோன்றினால் அழைக்க: 0422-2300999

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.